satish

பிக்பாஸ் புகழ் சாக்‌ஷியிடம் நகைச்சுவை நடிகர் சதீஷ் அடிவாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சதீஷ் தொடர்ந்து தனது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் உருவாகும் டெடி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யா, சாயிஷா முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது செல்போனை பார்த்து ஒரு பாடலை சதீஷ் பாட, அங்கு சாக்ஷி வருகிறார். அவரைப் பார்த்ததும் சதீஷ் வேறு மாதிரி பாட சாக்‌ஷி அவரை செல்லமாக அடிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.