Saindhavi About Ka Pae Ranasingam
Saindhavi About Ka Pae Ranasingam

விஜய் சேதுபதி படத்தில் பிரபல இசையமைப்பாளரின் தங்கை அறிமுகமாகி இருப்பதை பிரபலம் ஒருவர் வீடியோவில் வெளியிட்டு கூறியுள்ளார்.

Saindhavi About Ka Pae Ranasingam : தமிழ் சினிமாவின் ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம் என எதுவாக இருந்தாலும் சிறந்த வேடமாக இருந்தால் போதும் என ஏற்று நடிக்கும் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப் படத்திலும் வில்லனாக மிரட்டி இருந்தார்.

வெற்றி மாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகும் ஜிவி பிரகாஷ் – வில்லனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஹீரோவாக லாபம், கடைசி விவசாயி, க/பெ ரணசிங்கம், காத்துவாக்குல ரெண்டு காதல் என டஜன் கணக்கில் படங்கள் உருவாகி வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் தான் க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியானது.

இந்த படத்தில் நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்திருப்பதாக ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

க/பெ ரணசிங்கம் என்ற படத்தை பெ விருமாண்டி இயக்க கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் அடுத்ததாக இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.