Sai Pallavi Pair With Kaali Venkat

காமெடி நடிகருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Sai Pallavi Pair With Kaali Venkat : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி.இவரது நடிப்பில் மலையாள திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

மேலும் தமிழில் மாரி 2 மற்றும் என்ஜிகே திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காமெடி நடிகருக்கு ஹீரோயினியாக நடிக்க உள்ளார்.

காமெடி நடிகரான காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்திற்கு சாய்பல்லவி ஹீரோயினியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. காமெடி நடிகருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க போவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.