Sahoo movie
இந்திய சினிமா அளவில் மிக மோசமாக தோல்வி அடைந்த திரைப்படம் என்கிற இடத்தை சமீபத்தில் வெளியான சாஹோ பிடித்துள்ளது.

Sahoo movie biggbest flop in indian cinema – பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். எனவே, அவர் அடுத்து நடித்த சாஹோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்களை கவர தவறியதால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. பல தியேட்டர்களில் கூட்டமே இல்லை. சுருக்கமாக சொன்னால் இப்படம் படுதோல்வி அடைந்தது. படம் வெளியான அடுத்த நாளே இப்படம் வெளியான பல தியேட்டர்களில் வேறு படங்கள் திரையிடப்பட்டன.

sahoo

இந்திய சினிமா அளவில் இதற்கு முன்பு அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு படுதோல்வி அடைந்த முதல் இடத்தில் ஷாஜகான் இருக்கிறது. அந்த காலத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் தோல்வி அடைந்தது. தற்போது சாஹோ திரைப்படம் அதை முந்திக் கொண்டது.

8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு – அப்படி என்னப்பா காட்சி அது?

அனுபவம் இல்லாத இயக்குனர், பலவீனமான ரசிகர்களை கவராத, குழப்பமான கதை, திரைக்கதை, தேவையில்லாத ஆக்‌ஷன் காட்சிகள், வெற்று பில்டப்புகள் என சஹோ திரைப்படம் பல காரணங்களினால் தோல்வி அடைந்துள்ளது.

இப்படத்தில் நடிகர் பிரபாஸ் தனது சொந்த பணமாக ரூ.125 கோடியை செலவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, 4 அல்லது 5 சிறிய படங்களில் நடித்து கரையேற வேண்டிய சூழ்நிலையில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.