Sadhguru Jaggi Vasudev Press Meet

YouTube video

Shivangi With Suresh Raina : இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இவரை ரசிகர்கள் பலரும் சின்ன தல என கொண்டாடி வருகின்றனர். தல தோனி, விராட் கோலிக்கு நிகராக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் சுரேஷ் ரெய்னா பேட்மிண்டன் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், நிக்கி கல்ராணி, விஷ்ணு விஷாலின் காதலியும் பேட்மிட்டன் வீராங்கனையுமான ஜவாலா குட்டாவும் பங்கேற்றுள்ளார். இவர்கள் ரெய்னாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.