Saddest Moments in World Level Education : கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக உலகம் முழுவதும் கல்வி வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக ஐநா சபை கவலை தெரிவித்து.

பல்வேறு சமூகத்தினருக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை கல்வியால் மட்டுமே போக்க முடியும். அப்படிப்பட்ட கல்வியை ஒருமுன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற இந்த நேரத்தில், கொரோனா தொற்று பரவலால் அது பாழ்பட்டுப்போனது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் உலகம் முழுவதும் 160-க்கு மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்ட அவல நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி!

பெண் கல்வி முன்னேற்றத்திற்காக பல ஆண்டுகளாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலம் மூடப்பட்டிருந்தது, கல்வி பெறுவதில், சமூகத்தினருக்கு இடையே ஏற்ற தாழ்வை கொண்டு விடுமோ என்று என்ற பயம் ஏற்பட தான் செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் கொரோனாவிற்கு பிந்தைய சூழலுக்கு ஏற்புடைய அனைவரையும் உள்ளடக்கிய தரமான கல்வி முறையை நாம் இப்போதே உருவாக்க வேண்டும் என்று தனது வீடியோ அறிக்கையில் ஐநா பொதுச் செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.