SAC About New Announcement

பொங்கல் முடியட்டும் நல்ல செய்தியை வெளியிடுவேன் என தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் பரபரப்பு தகவல் ஒன்றை ஏற்றுள்ளார்.

SAC About New Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய் ரசிகர்கள் அனைவருமே இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவருடைய திரைப்பயணம் மிகவும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் வேலையில் தளபதி விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் தளபதி விஜய்க்கு தெரியாமல் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு விஜய் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனது கட்சி பணிகளை அப்படியே நிறுத்தினார் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள்.

இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பொங்கல் முடியட்டும் நல்ல செய்தியை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

எஸ் ஏ சந்திரசேகரன் இந்த பேச்சு தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.