SAC About Maanaadu Movie

மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு சிறப்பான படமாக அமையும் என எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

SAC About Maanaadu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சிம்புவின் அடுத்த படமான மாநாடு திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிய இருக்கும் நிலையில் சிம்பு பிறந்த நாள் அன்று டீசர் வெளியாகி 4 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் எஸ் ஏ சந்திரசேகர் மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு சிறப்பான படமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.