S J Suryah About Thalapathy Vijay

தளபதி விஜய் யாருடைய ரசிகர் என்பது குறித்து எஸ் ஜே சூர்யா பேசியுள்ளார்.

S J Suryah About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. படத்தின் டிரைலரை பார்த்து விட்டு தளபதி விஜய் தனக்கு போன் செய்து பாராட்டியதாக சூர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது நான் மகேஷ்பாபு ஸ்பைடர் பட ஷூட்டிங்கில் இருந்தேன். இரவு 11 மணிக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து போன் வந்தது.

எடுத்ததும் நான் பிச்சை பேசுவதாக கூறினார். என்னால் நம்ப முடியவில்லை.. மேலும் விஜய் தன்னுடைய ரசிகர் என கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார்.