ஒரு பக்கம் ரெளடி பேபி, இன்னொரு பக்கம் கொலைவெறி - மகிழ்ச்சியின் உச்சத்தில் தனுஷ் | Dhanush | HD

Rowdy Baby 2 Billion Views Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரின் சாய் பல்லவி இணைந்து நடித்திருந்த திரைப்படம் மாரி 2.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றியை பெற்றது. ரசிகர்கள் பலரும் இந்த பாடலை கொண்டாடி ஒருவர்.

பெரும்பாலும் தனுஷ் படத்தின் பாடல்கள் யூட்யூபில் தொடர் சாதனை படைத்தது வழக்கமான ஒன்று. ஆனால் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடல் இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது.

அதாவது யூடியூபில் இந்தப் பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று இருப்பதாக சாய்பல்லவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். யூடியூபில் இதுவரை இல்லாத அளவில் ரவுடி பேபி பாடல் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.