Roshini Haripriyan Without Makeup Photo

கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Roshini Haripriyan Without Makeup Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது டிஆர்பி-யில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக அருண்பிரசாத் நடிக்க நாயகியாக ரோஷ்நி ஹரிப்ரியன் நடித்து வருகிறார். மேலும் ரூபாஸ்ரீ செந்தில்குமாரி உள்ளிட்ட நடிகைகளும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் நாயகியான கண்ணம்மா நீயும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகைகள் பலரும் கருப்பு நிற தேவதை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரோஷினி ஹரிப்ரியன் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது இந்த சீரியல் மூலம் நல்ல பிரபலம் கிடைத்துள்ளது. ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு பல சவால்களை சந்தித்து உள்ளேன் என தெரிவித்துள்ளார்.