Roja Plays Kabadi With Students

இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாடி உள்ளார் நடிகை ரோஜா. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Roja Plays Kabadi With Students : தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார் ரோஜா. இயக்குனர் ஆர் கே செல்வமணி யை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

திரையுலக வாழ்க்கையை தொடர்ந்து நடிகை ரோஜா அரசியல் களத்தில் ஈடுபடத் தொடங்கினார். தற்போது விழாவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். இவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோஜா மாணவர்களுடன் இணைந்து கபடி விளையாடி உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. இந்த வயதிலும் ரோஜா எவ்வளவு ஆக்டிவாக இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் நடிகை ரோஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.