robo shankar

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா கால்பந்து வீராங்கணையாக நடித்திருந்தார்.

இவர் படப்பிடிப்பு இடைவெளியில் அப்படத்தில் அவருடன் கால்பந்தாட்ட வீராங்கணையாக நடித்த துணை நடிகைகளுடன் குத்தாட்டம் போடும் வீடியோவை ரோபோ சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிகில் டிரெய்லர் வெளியான போது, அதில் இந்திரஜா வரும் காட்சியை கண்டு கண்கலங்கி விட்டதாக ரோபோ சங்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.