Robo Shankar in Old Family Photos

ரோபோ சங்கரின் மகள் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Robo Shankar in Old Family Photos : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்‌.

ரோபோ சங்கர் பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இந்திரஜா சங்கர் என்ற மகள் உள்ளார். இவர் பிகில் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான நபராக இருந்து வரும் இந்திரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் தன் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர்களுக்கு திருமணமாகி 19 வருடங்கள் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். நீங்கள் இருவருமே எனக்கு ரோல் மாடல். நான் என்னைக்குமே உங்கள பெருமைப் படுத்திக் கொண்டே இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்