Director Bala
பாலா படத்திற்காக எக்கச்சக்கமாக உடல் வெயிட்டை ஏற்றியுள்ளார் பிரபல நடிகர், இது குறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. எந்த கதையாக இருந்தாலும் ஆணித்தனமாகவும் அழுத்தமாகவும் படமாக்குபவர் பாலா.

இவரது இயக்கத்தில் வர்மா திரைப்படம் உருவாகி ரிலீஸ் நேரத்தில் அப்படத்தை தயாரிப்பு நிறுவனம் நிராகரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாலா அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.கே சுரேஷ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக 73 கிலோ உடல் எடையில் இருந்து 93 கிலோவாக உயர்த்தியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.