RK Selvamani Announcement About Serial Shooting
RK Selvamani Announcement About Serial Shooting

மீண்டும் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் சின்னத்திரை படப்பிடிப்புகளின் நிலை என்ன என்பது குறித்து ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.

RK Selvamani Announcement About Serial Shooting : கடந்த வருடம் சீனாவில் உருவான கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா கிடுகிடுவென முன்னேறி சென்று கொண்டே இருக்கிறது. இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் தமிழகத்தில் சென்னை பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதுவரை இங்கு மட்டுமே கிட்டத்தட்ட 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை காட்டு காட்டுன்னு காட்டிய முன்னழகை பிளர் செய்து போட்டோ வெளியிட்ட மீரா மிதுன் – ரசிகர்கள் அடிக்கும் கமெண்ட் என்ன தெரியுமா?

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மீண்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சின்னத்திரை சூட்டிங்களுக்கு தற்போது தான் அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கியிருந்தன. இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தி இருப்பதால் சின்னத்திரை சூட்டிங், திரைப்படங்களில் post-production வேலைகள் ரத்து செய்யப்படும் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக திட்டமிட்டபடி மீண்டும் சின்னத்திரை சீரியல்களின் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாவது சந்தேகமே. இதுவரை ஒளிபரப்பப்பட்டு வந்த பழைய எபிசோடுகள் தொடர்ந்து ஒளிபரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.