Riyas Khan With Uma Photo

ரியாஸ் கானின் பிட்டான லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் உமா ரியாஸ் கான்.

Riyas Khan With Uma Photo : தமிழ் சினிமாவில் 90-களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் ரியாஸ் கான்.

இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சம்ஷத் கான், ஷாரிக் கான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஷாரிக் கான் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இந்த நிலையில் தற்போது உமா ரியாஸ் கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியாஸ் கான் கட்டுமஸ்த்தான உடலமைப்புடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்துடன் என்னோட கட்டத்துரை என்னுடைய உலகம் என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்