Rio Raj Video After BB

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக ரியோ வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rio Raj Video After BB : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சி நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி டைட்டில் வின்னர் ஆக ஆரியும் ரன்னராக பாலாஜி முருகதாஸூம் இடம்பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 போட்டியாளர்களில் ஒருவர் விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ ராஜ். பிக்பாஸ் நிகழ்ச்சியால் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

ரியோ ராஜ்க்கு எந்த அளவிற்கு ரசிகர்களை உள்ளார்களோ தற்போது அந்த அளவிற்கு அவரை விமர்சிப்பவர்களும் உள்ளார்கள் எனலாம்.

இப்படியான நிலையில் ரியோ ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இப்போ நான் நல்லா இருக்கேன். பிக் பாஸ் எனக்கு ஒரு நல்ல பயணம்.

அடுத்தடுத்து பண்ண வேண்டியது நிறைய இருக்கு அதெல்லாம் பிளான் பண்ணி பண்ணனும் என கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/CKRIHhZBeb5/?igshid=1sb0slwm81hk4