RioRaj Photos

மகளின் முதல் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார் நடிகர் ரியோ ராஜ்.

Rio Raj Daughter Birthday Celebration : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் ரியோ ராஜ்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமானார்.

இத்திரைப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையில் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியில் பங்கேற்று இருந்தார்.

இவர் நடிகை ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் தான் ஒரு மகளும் பிறந்திருந்தது.

தன்னுடைய மகள் பிறந்து ஒரு வருடமாகி விட்ட நிலையில் மகளின் பிறந்த நாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

ரியோ மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது மகளை வாழ்த்தியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ரியோவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.