Rekha About Bigg Boss Finalise Contestants

பிக் பாஸ் பைனல் வரை இவங்க மட்டும் தான் இருப்பாங்க என முதல் வாரத்தில் வெளியேறிய ரேகா பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Rekha About Bigg Boss Finalise Contestants : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் வாரத்தில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.

அடுத்ததாக பாடகி சுச்சி பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பைனலிஸ்ட்டாக சுரேஷ் சக்ரவர்த்தி, பாலா மற்றும் சிவானி ஆகியோர் இருக்கத்தான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் கிசு கிசுவாக பேசப்படுவார். சனம் ஷெட்டி நல்லா கேம் விளையாடுறார் என உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் ரேகா.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.