red alert

வங்ககடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அந்த தாழ்வு நிலை இன்று(அக்டோபர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது. எனவே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க‌க்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகம், கேரளா மற்றும் தெற்கு கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் சார்பில் நாளை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலார்ட் என்றால் பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காண்போம்.

வானிலை மிகவும் மோசமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருப்பது நல்லது.

போக்குவரத்து பாதிப்பு, மின் வசதி துண்டிப்பு ஏற்படக்கூடும்.

பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்..

கனமழையினால் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அரசு கூறுவதை பின்பற்ற வேண்டும்.

மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.