Record of Friendship Teaser

ப்ரெண்ட்ஷிப் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

Record of Friendship Teaser : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவைகளில் ஒன்று பிரெண்ட்ஷிப்.

ஹர்பஜன்சிங், சதீஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் இந்த படத்தில் லாஸ்லியாவுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று இந்த படத்தின் டீசர் வெளியானது.

யூடியூபில் வெளியான இந்த டீசர் 15 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஐம்பதாயிரம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

YouTube video


Preview YouTube video Glimpse of Friendship – Tamil | Harbhajan Singh, Arjun, Losliya, Sathish | D.M.UdhayaKumar