Reba Monica John Reply to Fan
Reba Monica John Reply to Fan

பிகில் பட ரசிகர் ஒருவர் இன்னொரு ஆசிட் முட்டை அடித்தால் சரியாக வருவா என கமெண்ட் அடித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Reba Monica John Reply to Fan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு முன்னதாக விஜய் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது.

இப்படத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து இருந்தவர் நடிகை ரெபோ மோனிகா ஜான்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் ஒரு சில சமயங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிடுவது உண்டு.

தளபதியுடன் படம் பண்ணுவது எப்போது? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த திரௌபதி இயக்குனரை கிண்டலடித்த ரசிகர்கள்

அப்படி இவர் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் இன்னொரு ஆசிட் முட்டை அடித்தால் தான் இவ சரியா வருவா என மோசமாக கமெண்ட் அடித்து இருந்தார்.

அந்த ரசிகரின் கமெண்ட்டால் கடுப்பான ரெபோ மோனிகா உடனே அந்த ரசிகரை பிளாக் செய்து உள்ளார்.

இவரின் இந்த அதிரடியான செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இது போன்ற ஆட்களிடம் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருப்பதை விட இப்படி அவர்களை பிளாக் செய்து விட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்று விட வேண்டும் என கூறி வருகின்றனர்.