கவினின் வெளியேற்றத்திற்கு சேரனின் வெளியேற்றம் தான் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.

Reason For Kavin Exits : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களுடன் முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக ரூ 5 லட்சத்துடன் கவின் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரின் வெளியேற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் சமூக வளையதளங்களில் உலா வர தொடங்கியுள்ளது.

லாஸ்லியா, கவின் காதல் என்ன உண்மையான காதலா? கிழித்தெடுத்த சர்ச்சை பிரபலம் – வீடியோ இதோ

அதில் முக்கியமாக பேசப்பட்டு வரும் தகவல் என்னவென்றால் ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்திருந்த போது சேரனிடம் நீங்க இருக்க தைரியத்தில் தான் போகிறேன் என கூறினார்.

சேரனின் வெளியேற்றத்திற்கு பிறகு லாஸ்லியாவிற்கு அந்த தருணத்தை மீண்டும் நினைவு கூறும் வகையில் போட்டோ ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் லாஸ்லியா.

இதனால் கவின் தான் உள்ளே இருந்தால் லாஸ்லியாவால் சரியாக விளையாட முடியாது, அவரின் பெற்றோர்களின் ஆசையை அவர் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. கவினும் இதையே தான் எபிசோடில் பேசி இருந்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.