Reason Behind Suriya Tested COVID19 Possitive

சூர்யாவிற்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Reason Behind Suriya Tested COVID19 Possitive : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியானது.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.

மேலும் இன்று சூர்யாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகவும் அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

மேலும் சூர்யாவிற்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில், ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு கலந்து கொண்டு அனைவரிடமும் கைகோர்க்கும் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார் சூர்யா.

இதனால் கூட சூர்யாவிற்கு தோற்று உறுதியாய் இருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

இதனால் சூர்யா தன்னுடன் கூட இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.