Real Title Winner of Bigg Boss 3

பிக் பாஸ் சீசன் 3 உண்மையான வெற்றியாளர் யார் என்பது குறித்த ஓட்டிங் நிலவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Real Title Winner of Bigg Boss 3 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தமிழ் சின்னத்திரையில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது. நான்காவது சீசன் கடந்த வாரம் தான் நிறைவு பெற்றது. இதன் வெற்றியாளராக ஆரியும் ரன்னராக பாலாஜி முருகதாஸூம் வென்றனர்.

இப்படியான நிலையில் சீசன் 3 உண்மையான வெற்றியாளர் யார் என்பது குறித்த ஓட்டிங் நிலவரம் ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் அதிக ஓட்டுக்கள் உடன் கவின் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகேன் ராவ் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் லாஸ்லியா மற்றும் 4வது இடத்தில் சாண்டி ஆகியோர் உள்ளனர். கவின் கடைசி நேரத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் டைட்டில் வின்னர் முகேன் ராவ் சென்றது தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த ஓட்டிங் நிலவரத்தை பார்த்த கவின் ஆர்மி கவின் வெளியேறாமல் இருந்திருந்தால் அவர் தான் டைட்டிலை வென்று இருப்பார் அதற்கு ஆதாரம் இதுதான் என அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.