RB Southri About Thalapathy Vijay

விஜயை வைத்து படம் எடுப்பீங்களா என்ற கேள்விக்கு ஆர். பி சௌத்ரி பதில் அளித்துள்ளார்.

RB Southri About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய தயாரிப்பில் நடிப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வருகிறது.

மேலும் அடுத்ததாக ஆர். பி சௌத்ரி தயாரிப்பில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் வெளிவந்த களத்தில் சந்திப்போம் என்ற படத்தின் சிறப்பு காட்சியின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது இது குறித்து கேட்டதற்கு முன்பெல்லாம் கதைக்கு விஜய் போன்ற ஹீரோ தேவைப்பட்டது. ஆனால் தற்போது விஜய்க்காக கதை உருவாக்கப்பட வேண்டிய உள்ளது.

அவருடைய லெவலுக்கு ஏற்றாற்போல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.