Rashmika Mandanna

ராஷ்மிகா மந்தனாவுக்கு கிடைத்துள்ள பெரிய வாய்ப்பு குறித்து தெரிய வர அவருடைய பெற்றோர்கள் கூட நம்பவில்லை.

Rashmika Mandannna Bollywood Movie : கன்னடத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் தெலுங்கு சினிமாவின் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் சினிமா மலையாளம் படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் இணைந்து குட்பை மற்றும் மிஷன் மஞ்சு ஆகிய படங்களில் நடிக்கிறார்.

அமிதாப் பச்சன் அவர்களுடன் நடிக்கச் செல்லும்போது பதற்றமாக இருந்தேன். ஆனால் அவர் சாதாரணமாக பேசியதும் அந்தப் பதட்டம் அப்படியே குறைந்து விட்டது.

அமிதாப்பச்சன் அவர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது என என்னுடைய பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. தலையில் அடித்து சத்தியம் செய்ததால் தான் நம்பினார்கள் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.