Rashmika Mandanna Photos in Saree

புடவையை கவர்ச்சியாக அணிந்து ஹாயாக காத்து வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா.

Rashmika Mandanna Photos in Saree : கன்னடத்தில் நாயகியாக அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்து வருபவர் ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கடந்த 2ஆம் தேதி வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிராமத்துப் பெண்ணாக சுட்டித்தனமான அழகான நடிப்பை ராஷ்மிகா மந்தனா வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதனால் தெலுங்கு சினிமாவை போலவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா வலம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தண்ணா கவர்ச்சியான புடவையில் ஹாயாக காற்று வாங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.