Rare Pictures of Thala Ajith in Valimai

வலிமை திரைப்படத்திலிருந்து அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rare Pictures of Thala Ajith in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட் அல்லது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாதா என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தல அஜித் செம ஸ்மார்ட்டான லுக்கில் இருப்பதால் இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/TFCTeamPage/status/1328338559074332672?s=19

இதேபோல் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடல் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவைச் சேர்ந்த பாடல் ஒரு பில்லியன் பார்வையாளர்களைப் பெறுவது இதுவே முதல் முறை எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.