Ranji Trophy: Ajay Rohera creates world record
Ranji Trophy: Ajay Rohera creates world record

Ranji Trophy: Ajay Rohera creates world record – ரஞ்சி : முதல் தர கிரிக்கெடில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்து வீரர் என்கிற பெருமையைப் பெற்று உள்ளார் 21 வயதான மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர் அஜய்.

இந்தூரில், ஹைதராபாத் மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டி நடைப்பெற்று இருக்கின்றது.

முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 124 ரங்களுக்குள் சுருண்டது. 21 வயது வேக பந்து வீச்சாளர் அவேஷ் கான் 7 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் பிறகு விளையாடிய மத்திய பிரதேச அணி 140.4 ஒவ்ர்களில் 4 விக்கெட் இழபிற்கு 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள 21 வயது அஜய் மிகச்சிறப்பாக விளையாடி 5 சிக்சர், 21 பவுண்டரிகள் உட்பட 267 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுடாகமல் இருந்தார்.

இது வரை 24 வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த அமோல் முஸிம்தார் 260 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இப்பொழுது அந்த சாதனையை அஜய் முறியடித்து உள்ளார்.

மேலும், அஜய் இன்னும் 3 ஓவர் கொடுத்து இருத்தல் தன்னால் 3 சதம் அடித்து இருக்க முடியும் என்று கேப்டன் நமன் ஓஜாவுக்கு சைகை செய்தார்,

இருந்தும் அணியின் நலனை கருதி அஜய் 267 ரன்கள் எடுத்த பொது டிக்ளேர் செய்தார் ஓஜா.