Ramya Pandian in 1st Movie After BB

பிக் பாஸ்க்கு பிறகு நடிக்கப் போகும் முதல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in 1st Movie After BB : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது.

18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் அடுத்து சில படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்ததால் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இன்னும் வைரலானார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ரம்யா பாண்டியன் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதனை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் ரம்யா பாண்டியன். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.