Ramya Krishnan in Chithi 2

சித்தி 2 சீரியலில் ராதிகாவிற்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Ramya Krishnan in Chithi 2 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சித்தி 2. இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் சீரியலை விட்டு விலகியதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு சித்தி 2 ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சீரியல் நிறுத்தப்படுமா என்றும் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இப்படியான நிலையில் ராதிகா நடித்த சாரதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ரம்யா கிருஷ்ணன் தான் சாரதா கதாபாத்திரத்தில் சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு பதிலாக நடிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.