Ramya About Her Marriage Life

திருமணமான பத்து நாளில் கணவரை பிரிந்தது ஏன் என ஆறு வருடங்களுக்கு பிறகு பேசியுள்ளார் ரம்யா.

Ramya About Her Marriage Life : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா. இவர் தற்போது படங்களில் நாயகியாக, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் கூட தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

ரம்யாவின் திருமணம் காதல் திருமணம் இல்லை. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். ஆனால் திருமணமான வெறும் பத்தே நாளில் தன்னுடைய கணவரை பிரிந்து அம்மா வீட்டிற்கு வந்து விட்டார்.

அதன் பிறகு ஒரு வருடம் கழித்து தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார். இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய விவாகரத்துக்கான காரணம் என்ன என பேசியுள்ளார்.

திருமணமான பத்தாவது நாளில் எங்களுக்குள் செட்டாகாது என தெரிந்து விட்டது. இதனால் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் அம்மா வீட்டிற்கு வந்து விவாகரத்து பெற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையேயான சிந்தனைகள் வேறு வேறு, அதுதான் எங்கள் பிரிவிற்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.