Ram Muthuram Cinemas About Master Collection

நீங்க தோல்வி என கதறும் சுறா திரைப்படம் எங்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படம் தான் என பிரபல திரையரங்கம் தெரிவித்துள்ளது.

Ram Muthuram Cinemas About Master Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா சாந்தனு ஸ்ரீமன் சஞ்சீவ் ஸ்ரீநாத் என ஏகப்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

வசூலிலும் இப்படம் செம மாஸ் காட்டி வருகிறது. இந்தநிலையில் திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாக தெரிவித்துள்ளது.

இதனை பார்த்த வேறு ஒரு நடிகரின் ரசிகர் ஒருவர் படம் பிளாப் என்பதை எப்படியெல்லாம் மறைக்கிறார்கள் என கிண்டல் அடித்தார்.

இதனையடுத்து ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் நீங்க தோல்வினு கதறும் சுறா திரைப்படமே எங்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படம் தான் என பதில் அளித்துள்ளனர்.

இதோ அந்த பதிவு