Ram Charan Tested COVID19 Possitive

தெலுங்கு நடிகர் ராம் சரண் தனக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Ram Charan Tested COVID19 Possitive : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையம் அச்சுறுத்தி வருகிறது. புதிய உருவ மாற்றத்துடன் இந்த வைரஸ் மீண்டும் அதிதீவிரமாக பரவத் தொடங்கி வருகிறது.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்புகளில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே தெலுங்கு நடிகையான ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட சில நடிகர் நடிகைகள் தங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தனர்.

இப்படியான நிலையில் நடிகர் ராம்சரண் தனக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அறிகுறி இல்லாத கொரானா வைரஸ் தொற்று என்பதால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் கடந்த இரு தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.