rafel flight
பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா புதிதாய் வாங்கிய ரஃபேல் விமானத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

Rajnath singh did shastra puja on rafale flight – பிரான்ஸ் நாட்டிடம் இருந்து புதிய ரஃபேல் விமானத்தை இந்தியா ரூ.1638 கோடிக்கு வாங்கியுள்ளது. வடமாநிலங்களில் தற்போது தசரத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வாவ்.. ஹெலிகாப்டர் ஓட்டும் அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

எனவே, விமானத்திற்கு பூஜை செய்ய விரும்பிய ராஜ்நாத் சிங் அதன் சக்கரத்தில் எலுமிச்சை பழம் வைத்தார். அதன்பின் விமானத்தின் நடுவில் ‘ஓம்’ என குங்குமத்தில் எழுதினார். மேலும், விமானத்தின் மேற்பகுதியில் பூ, தேங்காய் வைத்து பூஜை செய்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருபக்கம் பாஜக ஆதரவாளர்கள் இதை பெருமையாக குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்து வந்தாலும், மறுபக்கம் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் இதை கிண்டலடித்து வருகின்றனர்.