Rajkiran in Suriya Movie

20 வருடங்களுக்கு பிறகு சூர்யாவுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்க உள்ளார்.

Rajkiran in Suriya Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யா மற்றும் பாண்டிராஜ் முதல் முறையாக இணைந்துள்ள படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார்.

தற்போது இந்த திரைப்படத்தில் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகரான ராஜ்கிரண் தான். இவர் நடிகர் சூர்யாவுடன் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து இருபது வருடங்களுக்குப் பிறகு தற்போது இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பேசப்பட்டு வருகிறது.