இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவை நேரில் சென்று பார்த்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Rajinikanth visits Ilaiyaraaja’s new recording studio : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி திரைப்படத்தில் தொடர்ந்து பல மொழிகளில் பல திரைப்படங்களில் இசை அமைத்து உள்ளார்.
தற்போது இசைஞானி இளையராஜா ஸ்டுடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து பாராட்டியுள்ளார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.