Rajinikanth Trip to America

அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவிற்கு பறக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth Trip to America : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வந்ததும் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தன்னுடைய வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார் என தெரியவந்துள்ளது.

தற்போது நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் என அனைவரும் அமெரிக்காவில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.