rajinikanth
நடிகர் ரஜினி மீண்டும் தனது இமயமலை பயணத்தை துவங்கியுள்ளார்.

Rajinikanth traveling to himalaya for spiritual base – நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடைபெற்று வந்தது. மேலும் , படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். ரஜினிகாந்த பல வருடங்களாகவே இமயமலைக்கு ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால், கடந்த வருடங்களாக இமையமலைக்கு செல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போது தர்பார் படம் முடிவடைய உள்ள நிலையில் அவர் மீண்டும் பாபா குகையில் தியானம் செய்ய கிளம்பியுள்ளார்.