கர்ணன் படம் பார்த்த ரஜினிகாந்த் படம் பற்றிய விமர்சனத்தை கூறியுள்ளார்.

Rajinikanth Review For Karnan  : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

திரையுலக பிரபலங்கள் பலரும் படம் பற்றி விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ரஜினிகாந்த் இந்த படத்தினை ரிலீசுக்கு முன்பாகவே பார்த்து விட்டு பாராட்டியதாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் எந்த படம் ரிலீசானாலும் அதனை பார்ப்பது வழக்கம். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் செல்ல இருந்ததால் என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க கர்ணன் படத்தினை ரிலீசுக்கு முன்பாகவே பார்த்து விட்டார். படக்குழுவினரை பாராட்டினார் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.