Rajinikanth Request to Fans

அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth Request to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்ததை அடுத்து அண்ணாத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூரில் தன் அண்ணன் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரஜினிகாந்த். அதை முடித்து விட்டு அப்படியே வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் செல்ல இருப்பதால் தன்னுடைய பிறந்த நாளன்று ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.