Rajinikanth in Next Movies Update

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த ஷூட்டிங் முடிவுக்கு வர இருப்பதாகவும் அடுத்தத்தடுத்த படங்களின் இயக்குனர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

Rajinikanth in Next Movies Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனையடுத்து சென்னை திரும்புகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அண்ணாத்த படத்திற்கு பிறகு இரண்டு இயக்குனருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார். முதலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து முடித்து விட்டு அதன் பின்னர் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கலாம் என்ற முடிவில் உள்ளாராம்.

ரஜினி மற்றும் தேசிங்கு பெரியசாமி இணையும் படத்தின் படப்பிடிப்புகள் ஜூலையில் தொடங்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.