Rajinikanth Clarification on Political Party Launch

ரஜினியின் உடல்நிலை குறைபாட்டால் அரசியல் கட்சி அறிவிப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்டு வந்த நிலையில் அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Clarification on Political Party Launch : தமிழகத்தில் முன்னாள் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறி திரையுலக பிரபலங்கள் பலர் அரசியலில் நுழைய தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் மூலமாக தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அரசியலில் களமிறங்க உள்ளார்.

தன்னுடைய அரசியல் கட்சி அறிவிப்பு தேதி டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் காரணமாக ரஜினியின் புதிய அரசியல் கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாவது தள்ளிப் போகலாம் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 31-ஆம் தேதி ரஜினியின் அரசியல் கட்சி தொடங்கப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.