Rajini Next film is not Baba 2 | This is the story of Baba 2's Part 2 spread from the past. Kollywood | Tamil Cinema | Rajinikanth

Rajini Next film is not Baba 2 :

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் இணையும் படம் பாபா படத்தின் பார்ட் 2 என்றொரு தகவல் பரவி வருகிறது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

ரஜினி 168 படத்தை இயக்குவது இவர்தானாம்; கே.எஸ்.ரவிக்குமார் இல்லையாம்!

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் நடைபெற்று வந்தது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இதைதொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இது பாபா படத்தின் பார்ட் 2 என்றொரு தகவல் நேற்றில் இருந்து பரவி வருகிறது.

ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் இத்தகவலை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.