Raja Vamsam Release Date

சசிகுமார் – நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள ராஜ வம்சம் மார்ச் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Raja Vamsam Release Date : செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ”ராஜ வம்சம்” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C. அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர் தான் கதிர்வேலு .

இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார் , சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு , கும்கி அஸ்வின், ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி, ரமணி , ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பு N .சிவகுமார், தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம் .

செந்தூர் பிலிம்ஸ் சார்பில் TD ராஜா தயாரித்துள்ள ராஜ வம்சம் மார்ச் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது .