அவர் போஸ்டர் ல நான் சாணி அடித்தேன் என ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக பயணத்தை தொடங்கி இன்று இயக்குனராகவும் தயாரிப்பாளர்களும் நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.
இவர் நேற்று நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசும் போது நான் சிறுவயதில் கமல்ஹாசனின் போஸ்டர் மீது சாணி அடித்ததாக கூறினார்.
ராகவா லாரன்ஸ் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த அதற்கு அவர் பதில் கொடுத்துள்ளார். அதாவது அது நான் சிறு வயதில் தெரியாமல் செய்தது. நான் பேசியது கமல் சார் ரசிகர்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
எனக்கு கமல் சார் மீதும் மதிப்பும் மரியாதையும் உள்ளது என பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.
Watch the full video of My speech at Darbar audio launchhttps://t.co/PdvI3FZ2YR pic.twitter.com/7eOJH5Zag5
— Raghava Lawrence (@offl_Lawrence) December 7, 2019