Raghava Lawrence Request to Kerala CM
Raghava Lawrence Request to Kerala CM

நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள முதல்வருக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

Raghava Lawrence Request to Kerala CM : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிக்கையாளர் அசோக் என்பவரின் தாயார் திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் முடக்குவாத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எங்களுக்கு ஒரு வழி பண்ணுங்க.. லாரன்ஸ் வீட்டின் முன்பு கூடிய மக்கள் – நடந்தது என்ன தெரியுமா?

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியாமல் அந்த பத்திரிக்கையாளர் தவித்து வருகிறார்.

இந்த தகவலை தன்னுடைய உதவியாளர் மூலம் அறிந்த ராகவா லாரன்ஸ் கேரள முதல்வருக்கு கடிதம் ஒன்றின் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார்.

அதில் வறுமையில் வாடும் அந்த பத்திரிக்கையாளருக்கு தயவுசெய்து உதவுங்கள். மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய தொகையை நானே ஓரிரு நாளில் செலுத்தி விடுகிறேன்.

அவருக்கு நீங்கள் உதவுவீர்கள் என நான் நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.