Raghava Lawrence Releave From Vikram

விக்ரம் படத்தில் இருந்து நடிகர் ராகவா லாரன்ஸ் விலகியதற்கான காரணம் என்ன என்று தற்போது தெரியவந்துள்ளது.

Raghava Lawrence Releave From Vikram ; தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படம் மட்டுமல்லாமல் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளன. கமலுக்கு வில்லனாக பகத் பாஷில் நடிக்க உள்ளார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் நடிக்க இருந்தார்.

ஆனால் இவர் தற்போது ருத்ரன் என்ற படத்தில் பிசியாக நடித்து வருவதாலும் அதனைத் தொடர்ந்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் இருப்பதாலும் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.